News Just In

2/12/2023 12:20:00 PM

இலங்கையில் 10 வருட நடைமுறையில் ஏற்படும் மாற்றம்!

இலங்கையில் பணவீக்கத்தை அளவிட பத்து ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த முறையை மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, 2013ஆம் ஆண்டு பொருட்களின் விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க அளவீடு இரத்து செய்யப்படும்.

அதற்கமைய, எதிர்கால பணவீக்கத்தை அளவிடுவதற்கு 2021 ஆம் ஆண்டில் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கீடுகளை செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

தற்போதைய பணவீக்கத்தை கணக்கிடும் முறை நடைமுறைக்கு மாறானது என்ற விமர்சனம் காரணமாக அமைச்சர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டை அடிப்படை கொண்டு பணவீக்கத்தைக் கணக்கிடும் போது பணவீக்கத்தில் யதார்த்தமான மாற்றம் ஏற்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments: