News Just In

2/03/2023 07:50:00 AM

பிலிப்பைன்ஸில் 104 பேருடன் விபத்துக்குள்ளன விமானம்! திடுக்கிடும் பின்னணி

விமானிகளுக்கு அளிக்கப்பட்ட தவறான வரைபடம் காரணமாகவே பிலிப்பைன்ஸில்104 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் பிலிப்பைன்ஸ் உள்ளூர் விமான சேவையின் மிக மோசமான சம்பவம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், விபத்துக்குள்ளான விமானமானது மணிலாவிலிருந்து லும்பியா விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விமானம் சுமகயா மலையின் சரிவுகளில் மோதியதில் அந்த விமானத்தில் 31 வயதான விமானி மெக்டோனல் டக்ளஸ் உட்பட பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

பெப்ரவரி 02-1998ல் நடந்த இந்த விபத்து தொடர்பான விசாரணையில், விமானிகள் பயன்படுத்திய வரைபடங்கள், சுமகயா மலையின் உயரத்தை 6,000 அடி (1,800 மீ) க்கு பதிலாக கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி (1,500 மீ) என தவறாக பட்டியலிட்டுள்ளது.

இதனால், விமானிகளும் தாங்கள் மலையில் இருந்து பாதுகாப்பான உயரத்தில் இருப்பதாக கருதியுள்ளனர்.
ஆனால் உண்மையில் மிக ஆபத்தான உயரத்தில் அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது. மேலும், விமானிகளின் பயிற்சியில் குறைபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் மொத்தம் 5 சிறார்கள் உட்பட 94 பிலிப்பைன்ஸ் மக்கள் பயணித்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து பயணிகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பணியில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் அதில் பயணித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதி தொடர்பில் தற்போதும் சந்தேகம் நீடித்து வருகிறது.

மேலும், பொதுவாக பயன்படுத்தப்படாத, மோசமான காலநிலை கொண்ட பாதையை விமானிகள் தெரிவு செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

No comments: