புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 25 ஆம் திகதி வெளியான நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக்கூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் பெம்வந்த பீ. அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் பசிடு (181), ஓவிடு (177) மற்றும் தினிடு (167) புள்ளிகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற பசிடு என்ற மாணவனே பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதாக அதிபர் துஷார மதரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சகோதரர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் எனவும்,பெரும் இன்னல்களுக்கு மத்தியில் இவர்கள் கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
No comments: