News Just In

1/26/2023 02:47:00 PM

கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு!




அபு அலா -
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவின் அறிவுருத்தல்களுக்கிணங்க 75வது தேசிய சுதந்திரதின விழா எதிர்வரும் 02 ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் (மாலை 3.30 மணி) திருகோணமலை - அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தெரிவித்தார்.

75வது தேசிய சுதந்திரதின விழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 75வது சுதந்திரதின விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுதந்திரதின விஷேட உரையினை நிகழ்த்தவுள்ளார். இவ்விழாவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments: