
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமும் 'சிறகுகள்' சிறப்பு மலர் வெளியீடும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 28.12.2022 (புதன்கிழமை) மாலை இடம் பெற்றது.
பிரதேச செயலக சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட். மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், மட்டக்களப்பு மாவட்ட வை.எம்.சி.ஏ. அமைப்பின் திட்ட முகாமையாளர் எம்.அன்பரசன், சமுக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரீ.யாழினி, திருமதி ஏ.டபள்யூ.நுஸ்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலகத்தினால் முதன் முதலாக வெளியிடப்பட்ட சிறகுகள் சிறப்பு மலர் இதழாசிரியர் திருமதி ரீ.யாழினியால் பிரதம அதிதி வீ.தவராஜாவுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறப்பு மலரின் அறிமுகத்தினை எழுத்தாளரும் பாடசாலை அதிபருமாகிய எச்.எம்.எம்.இஸ்மாயில் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு மாதாந்த உதவி தொகை பெறுவதில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 82 பயனாளிகளுக்கு ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட உணவு பரிமாற்றல் நிலையத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments: