News Just In

9/06/2022 08:36:00 PM

சீனாவினால் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் Board கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட SMART BOARD விநியோகம் நேற்று (05) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.



இலங்கைக்கான சீனத் தூதுவர் சி. திரு. ஷென்ஹோனினால் ஆளுநரிடம் SMART BOARD கையிருப்பை வழங்கியதை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 20 பாடசாலைகளுக்கு ஒரு SMART BOARD வழங்கப்பட்டது.



அங்கு ஆளுநர் மற்றும் சீனத் தூதுவர் ஆகியோர் உரிய SMART BOARDஐ அந்தக் கல்லூரிகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

மேலும் ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சீனத் தூதுவர் இந்த SMART BOARD கையிருப்பை மிகக் குறுகிய காலத்தில் வழங்கியமையும் சிறப்பு.

ஸ்மார்ட் Board கள் வழங்கிய பாடசாலைகளின் பட்டியல் பின்வருமாறு.

1▪️Trincomalee zone - T/T/Peruntheru Vigneswara Maha Vidyalaya

2▪️Trincomalee North zone - T/Tn/ Sinhapura Vidyawardana Vidyalaya

3▪️Trincomalee North zone - T/Tn/ Ethabendiwewa Vidyalaya

4▪️Kanthale zone - T/Kn/ Kanthale Madya maha Vidyalaya

5▪️Muthur zone - T/Mu/ Barathi Maha Vidyalaya

6▪️Kinniya zone - T/Kin/ Al-Athan Maha Vidyalaya

7▪️Batticaloa zone - Bt/Bt/ Thannamunai St.Joseph College

8▪️Paddiripou zone - Bt/Pd/ Kurumanvely Sivasakthy Maha Vidyalaya

9▪️Batticaloa West zone - Bt/Bw/ Kokkadicholai RKM Maha Vidyalaya

10▪️Kalkudah zone - Kalkudah Siri Seelalankara Pirivena/ Kalkudah Sinhala Maha Vidyalaya

11▪️Kalkudah zone - Bt/Kk/ Chenkalady Vivekananda Vidyalaya

12▪️Batticaloa Central zone - Bt/Bc/ Millath Girl’s High School

13▪️Ampara zone - Am/Am/ Galapitagala Maha Vidyalaya

14▪️Ampara zone - Am/ Panama Maha Vidyalaya

15▪️Mahaoya zone - Am/ Mh/ Nuwaragalathenna Maha Vidyalaya

16▪️Sammanthure zone - Km/ St/ As-Siraj Maha Vidyalaya

17▪️Kalmune zone - Km/Km/ Pulavarmani Saturdeen Maha Vidyalaya

18▪️Dehiattakandiya zone - Am/ Dk/ Dolakanda Maha Vidyalaya

19▪️Thirukkovil zone - Km/Tk/ Thirukkovil MMT Maha Vidyalaya

20▪️Akkarapattu zone - Km/ Ak/ Al- Kalam Maha Vidyalaya

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்துவதற்கான ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண சபையும் சீனாவின் "யுன்னான் வர்த்தக சங்கமும்" இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.



இந்நிகழ்வில்,பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம், அதிபர்கள் மற்றும் சீனத் தூதரகப் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments: