News Just In

9/22/2022 02:06:00 PM

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மையங்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!



 
(சர்ஜுன் லாபீர்)

மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் ,சத்துணவு மூலம் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுவித்தல், உணவு பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான கிராமத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளின் கீழ் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத அலி தலைமையில் இன்று(22) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

" அனைத்துப் பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலைமையின் கீழும் சுறுசுறுப்பான , ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் நேவையான போதுமான உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை "எனும் தொனிப்பெருளினை நோக்காகக் கொண்டு இச் செயற்திட்டம் நாடு பூராக அமுல்படுத்தப்படவுள்ளது..

கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் அவர்களின் நெறிப்படுத்தலிலும் வரவேற்புரையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோசன் அக்தார்,எம்.எஸ் உமர் அலி,எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),எம்.எஸ்.எம் நவாஸ்,ஏ.எச்.ஏ லாஹீர்,ஏ.எஸ் ஹமீட்,எம்.ஐ.எம் ரஜாப்தீன்,யூ.எல்.எஸ் சமீனா,கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,மேற்பார்வை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம் பறூக்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர். ஏ.ஆர்.எம் சாலீஹ்,,உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எம் ரசீன் அபிவிருத்தி ஒஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா,சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஏ நஜிபர்,எம்.எம்,ஏ நபீல்,எஸ்.எம் அர்சாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்






No comments: