News Just In

9/02/2022 11:18:00 AM

உயர்தரப் பரீட்சையில்சாதித்த . லோகிதன் கிசோபன் . ஆளுநர் திருமதி அனுராதா யகம்பத். ஒரு இலட்சம் சன்மானம்வழங்கி கௌரவித்தார்.




.
(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் நான்காவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் சாதித்த செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் லோகிதன் கிசோபன் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யகம்பத்தினால் ஒரு இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கல்லூரியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு லோகிதன் கிசோப னுக்கு இந்த கௌரவிப்பு அன்பளிப்புத்தொகை வழங்கி வைத்தார்.

. கொம்மாதுறை பகுதியை பிறப்பிடமாக கொண்ட லோகிதன் கிசோபன்மாவட்டம் ,மாகாணமட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்.வித்தியாலய அதிபர்டீ.குகதாசன் தலைமையில் இந்த விசேட நிகழ்வு நடைபெற்றது .

இந்த விசேட நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பீ..மதன்னாயகா கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி பிள்ளை நாயகம் . கல்குடா கடலில் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் ரவி உள்ளிட்ட அதிபர்கள் மற்றும் கிசோபனின் பெற்றோரும் இங்கு சமூகமளித்திருந்தனர் .


No comments: