News Just In

9/06/2022 02:51:00 PM

மாணவர்களின் வெற்றியானது ஆசிரியர்களின் கடின உழைப்பின் வெளிப்பாடே : மாணவர்கள் கௌரவிப்பில் சமட் ஹமீட் தெரிவிப்பு !




நூருல் ஹுதா உமர்

மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் கொரோனா காலத்தில் தொய்வில் இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் விடா முயறசியினால் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது. கிழக்கு மாகாணம் அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருப்பது ஆசிரியர்களின் கடின உழைப்பின் வெளிப்பாடாகும். மாணவர்கள் தியாக சிந்தனையுடன் கற்றால் உயரிய நிலையை அடையலாம் என்பதற்கு அந்த பெறுபேறுகள் சாட்ச்சியாக இருக்கிறது என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் மருதமுனை இணைப்பாளருமான சமட் ஹமீட் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மதீனா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி கூடுதலான புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் மருதமுனை இணைப்பாளருமான சமட் ஹமீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்து உரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பிள்ளைகள் பெற்றோரின் பொருளாதார நிலையறிந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதீத விலையேற்றம் காரணமாக அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினையினால் நிறைய தொழில்கள் முடங்கியுள்ளது. இன்று கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி எல்லா மாணவர்களும் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கியதாக கொண்டுசெல்ல தக்கதாக தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டு என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஐ. நூருல் பௌஸ், மத்திய குழு உறுப்பினர்களான ஏ.எம்.ஷிபான், எம்.எஸ்.எம். சர்ஜில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments: