News Just In

6/21/2022 06:20:00 AM

தனியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் - உடையார் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், காணியின் உரிமையாளரான கந்தசாமி என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது காணியினை துப்பரவு செய்த போது, காணிக்குள் புதைக்கப்பட்டு இருந்த சில பரல்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொலிஸார் காணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் பிரகாரம் நேற்றைய தினம் (20-06-2022) திங்கட்கிழமை முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், பொலிஸ் அதிகாரிகள், படை அதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன குறித்த 7 பெரல்களில் இருந்தும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் காணப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று (21-06-2022) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அது தொடர்பில் காணி உரிமையாளர் தெரிவிக்கையில்,

“தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தினை அகற்றும் போது நிலத்தில் பெரல் புதைக்கப்பட்டு இருந்தன. இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது.

போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம்.




No comments: