News Just In

5/28/2022 07:32:00 AM

காலி முகத்திடலில் நிகழ்ந்த கலவரத்தினால் பாரிய நஷ்டத்தை சந்தித்த இலங்கை போக்குவரத்து சபை!

காலிமுகத்திடல் அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக போக்குவரத்துச் சபைக்கு ஐந்து கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் அருகே கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகை அருகே மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதனையடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் திருப்பித் தாக்கியதில் ஏராளமான சொத்துக்களும், பேருந்துகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.

காலிமுகத்திடல் அறவழிப்போராட்டத்தின் எதிரொலி
குறித்த தாக்குதல் சம்பவத்துக்காக ஆளுங்கட்சியின் குண்டர்களை ஏற்றிச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் வாடகை இன்றி பயன்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்களின் தாக்குதல் காரணமாக அவை சேதமடைந்துள்ளதன் காரணமாக போக்குவரத்துச் சபைக்கு ஐந்து கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சி சார்பான தொழிற்சங்கத்தின் தலைவர் பந்துல ரத்நாயக்க என்பவரே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போக்குவரத்துச் சபை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: