News Just In

5/21/2022 06:27:00 AM

எம்.பி அமரகீர்த்தி கொலை தொடர்பில் வெளியான புதிய சிசிரிவி படங்கள்!

மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ( Athukorala) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த கொலையின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: