News Just In

5/22/2022 05:52:00 PM

இலங்கை ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிற்சி நெறிகளை முடித்துக் கொண்ட 116 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு!

இலங்கை ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிற்சி நெறிகளை முடித்துக் கொண்ட 116 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதாக காத்தான்குடியிலுள்ள ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் ஏ. றியாஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை 22.05.2022 இடம்பெற்றது.

தமது பயிற்சிக் காலத்தின்போது தாபன விதிக்கோவையில் ஆசிரியருக்குள்ள அடிப்படை விடயங்கள்> கல்விக்கான தகவல் தொழில் நுட்பம்> செயல்திறன் மற்றும் மேம்பாட்டு நுட்ப முறைமை> ஆசிரிய விழுமியங்கள்> வகுப்பறை முகாமைத்துவம் உள்ளிட்ட இன்னும் பல கற்றல் கற்பித்தல் முறைமைப் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஆசியர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் உமர் மௌலானா> நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா றிப்கா> அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றமீஸ் உட்பட இன்னும் பல கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் ஆசியர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றிய ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் றியாஸ்> சான்றிதழ் கையில் கிடைத்து விட்டதால் சான்றிதழ் மட்டும் உங்களது தகைமை என்று நினைத்துக் கொண்டு செயல்படாமல் இருந்து விடாதீர்கள். மாணவர்கள்தான் எதிர்காலத் தலைவர்கள் அவர்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் தமது வாண்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாங்கள் பெற்றுக் கொண்ட திறமைகளையும் ஆற்றல்களையும் புறக்கிருத்திய செயல்பாடுகளையும் உள்ளக வெளிக்களப் பயிற்சியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவாற்றல்களையும் மாணவர்களின் முன்னேற்றதிற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

.எச்.ஹுஸைன்

No comments: