News Just In

4/18/2022 06:09:00 AM

2 நாட்களாக எரிபொருள் இல்லை: வீதியை மறித்து மக்கள் போராட்டம்

கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்ற பெருமளவான மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வாகனங்களை மறித்து இன்று (17) இரவு 07.30 மணியளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.எரிபொருளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள், கோட்டாபயவை அப்புறப்படுத்துங்கள் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர், பெம்முல்ல, கம்பஹா, வீரகுல, யக்கல மற்றும் நிட்டம்புவ பொலிஸ் நிலையங்களில் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்த போதும், போராட்டக்காரர்கள் தொடர்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, பலாங்கொடை, துகொட, கிரிடிகல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இரவு வரிசையில் நின்ற மக்கள் எரிபொருள் கோரி கொழும்பு - பதுளை பிரதான வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

பலாங்கொடை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் நிரப்பப்படாமையால் பலாங்கொடை கிரிடிகல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காலை 17 மணிமுதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமளவான மக்கள் எரிபொருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: