News Just In

3/24/2022 04:28:00 PM

இளைஞர் சேவைகள் மாகாண காரியாலய இடமாற்றத்தை நிறுத்த பிரதமர் பணிப்பு : முஸ்லிம் எம்.பிக்கள், கிழக்கின் கேடயம், இளைஞர்களின் முயற்சிக்கு பலன் !



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் இருந்து இடமாற்றம் செய்யப்பட இருந்த கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் காரியாலய விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரினாலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது விடயத்தின் நியாயத்தன்மையை எடுத்துரைத்ததுதும் உடனடியாக இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் தமித விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து விடயத்தை எடுத்துரைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இளைஞர்களின் நலன் கருதி இவ்விடமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இசாக் ரஹ்மான், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கிழக்கு மாகாண இளைஞர்களின் சேவை நிலையமாக இருக்கும் இந்த மாகாண காரியாலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து கிழக்கின் கேடயம், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: