News Just In

3/16/2022 06:54:00 AM

சீனாவிடம் இருந்து உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் ரஷ்ய படை!

உக்ரைனில் மீது 20 வது நாளாக தொடர்ச்சியாக போரிட்டுவரும் ரஷ்ய துருப்புகளுக்கு உண்பதற்காக சீனாவிடம் இருந்து உணவுப் பொருட்களை ரஷ்யா வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை ரஷ்யா, சீனாவிடம் கேட்டுள்ளது என்ற செய்திகளுக்கு மத்தியில், உணவுப் பொருட்களை வாங்குவதாக C.N.N நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், கெட்டுப் போகாத மற்றும் சாப்பிடத் தயார் நிலையில் உள்ள உணவுப் போத்தல்களை சீனா அனுப்பியுள்ளதாகவும், சி.என்.என் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: