News Just In

3/21/2022 06:28:00 AM

பீரங்கி குண்டுகளை வானில் வீசி பரிசோதனை மேற்கொண்ட வடகொரியா!

வடகொரியா பீரங்கி குண்டுகளை வானில் வீசி பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (20) வடகொரியா குறித்த பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட 04 பீரங்கி குண்டுகள் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் திரும்பப்பெறுவதற்கு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாகவும் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

அதன்படி இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை 10 முறை ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.

இதில் கடைசியாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையிலே மீண்டும் வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணையை முழுமையாக சோதிக்க தயாராகி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: