News Just In

3/14/2022 01:09:00 PM

திருகோணமலை செய்தி!



எப்.முபாரக் 
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறைந்த வருமானம் பெறுகின்ற இருபது குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்க ஞாயிற்றுக்கிழமை(13) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் வாத்தியாகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடுகள் இல்லாத அல்லது வீடுகள் நிறைவடையாத குறைந்த வருமானம் பெறுகின்ற இருபது குடும்பங்களுக்கே இவ்வாறு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.

இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரலவினால் அடிக்கல் நாட்டப்பட்டன.ஒரு வீடு அமைப்பதற்கு ஆறு இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் கீழ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரின் விசேட தலையீட்டின் கீழ், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மேற்பார்வையில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 2000 வீடுகள் நிர்மாணிக்க்ப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






No comments: