News Just In

3/20/2022 06:25:00 AM

பிரித்தானிய நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு! தமிழர்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

பிரித்தானியாவின் P அன்ட் O பெர்ரிஸ் கப்பல் நிறுவனம் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

அவர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளம் வழங்க கூடிய தொழிலாளர்களை நியமிக்கவுள்ளது. இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் உட்பட பலருக்கு சிறந்த சம்பளத்துடனான தொழிலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு சில மாதங்களிலேயே 100 மில்லியன் பவுண்டுகள், நஷ்டமடைந்த P அன்ட் O கப்பல் சேவை, பிரித்தானியாவில் உள்ள தனது அனைத்து கப்பல் தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு வீடியோ அழைப்பில் நேற்று வேலையின் இறுதி நாள் என கப்பல் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கப்பல்களை விட்டு வெளியேற மறுத்த நிலையில், பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊழியர்கள் அகற்றப்பட்ட நிலையில் கப்பல் நிறுவனம் 10 நாட்கள் தமது சேவையை நிறுத்தியுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி அறிவித்துள்ளார்.

அத்தோடு ஆயிரக்கணக்கான புது தொழிலாளர்களை அது வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள நிலையில். எவரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் நகரில் இருந்து, பிரான்ஸ் செல்லும் இந்த கப்பல் சேவையில், பணி செய்ய விரும்பும் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை செய்யும் பல ஊழியர்களுக்கு மணித்தியாலத்திற்கு 16 பவுண்டுகளுக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் போனஸ் மற்றும் ஏனைய கொடுப்பனவுடன் பாரிய சம்பளத்தை பெற்ற ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் விருப்பத்திற்கமைய செயற்பட்டுள்ளனர். எனினும் தொழிற்சங்கங்களை கலைக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அனைத்து ஊழியர்களையும் நீக்கியுள்ளது. தற்போது அவர்கள் இணையத் தளம் ஊடாக வேலை வாய்ப்புக்கு, புதிய ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: