News Just In

2/27/2022 01:14:00 PM

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு!


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.லங்கா ஐஓசி நிறுவனமும் கடந்த 6ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லீட்டர் டிசல் 139 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments: