
இதன் காரணமாக பொதுமக்கள் நிலத்தடி பதுங்குக்குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வழங்கப்பட்ட செய்திகளின்படி, நேற்று இரவுப்பொழுதை குடியிருப்பாளர்கள் பதற்றமான சூழ்நிலையில் கழித்துள்ளனர்.தலைநகர், கியூவில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கே உள்ள எண்ணெய் முனையத்தில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தலைநகரில் இதுவரை வெடிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதேவேளை பிந்திய தாக்குதல்களின் போது 64 உக்ரைனியர்கள் பலியானதுடன் 240பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.இதற்கிடையில் கியூவின் புறநகர்ப் பகுதியில் தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்கில் இருந்து புகை மற்றும் நச்சுப் புகை வெளியாவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குடியிருப்பாளர்கள் தங்கள் ஜன்னல்களை இறுக்கமாக மூடிக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன் பல குடியிருப்பாளர்கள் ஏற்கனவே நிலத்தடியில் பாதுகாப்பை நாடியுள்ளனர்
No comments: