News Just In

2/28/2022 03:48:00 PM

விபரீதத்தில் முடிந்த பதின்ம வயது காதலால் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி!

திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பெப்ரவரி முதலாம் திகதிதிருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள அக்போபுர, பெரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.. சம்பவம் குறித்து தெரியவருகையில்,

கவீஷா அந்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார். தந்தை பத்திரன, மேசன் தொழிலாளி ஆவார். சம்பவம் இடம்பெற்ற அன்று, அவர் கட்டுமான வேலைகளிற்கான அருகிலுள்ள மெதிரிகிரியவிற்கு சென்றுவிட்டார். வீட்டில் கவீஷாவும், அம்மாவும் மட்டுமேயிருந்தனர்.

அப்போது வீட்டிற்கு வெளியே ஏதோ நிழலாடுவதை உண்ர்ந்து, தாயும் மகளும் வெளியே சென்றனர். அங்கு யாருமிருக்கவில்லை . ஏதோ பிரமையென நினைத்துக் கொண்டு, இருவரும் வீட்டின் முன்பக்கத்திற்கு திரும்பியபோது கவீஷா மட்டும் வீட்டின் முன்வாசலிற்கு சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டதும்,தாயார் வீட்டின் முன்பகுதிக்கு ஓடிச் சென்றார். அவர் முன்வாசலை அண்மிக்க, வீட்டிற்குள்ளிருந்து ஒரு இளைஞன் வெளியே ஓடினான்.

அவன் பின்னாலேயே கவீஷா அலறியபடி நடந்து வந்தை கண்ட தாயார், தப்பியோடிய இளைஞனின் பின்னாலேயே கூக்குரலிட்டபடி விரட்டிச் சென்றபோதும் அவரால் அவனை பிடிக்க முடியவில்லை.

அவரது கூக்குரலை கேட்டு அயலவர்கள் கூடி, கவீஷாவை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலையில் நான்கு மணித்தியால அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவிஷா விடுதியில் அனுமதிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் கடந்த 4ஆம் திகதி கவிஷாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.போகும் வழியில் தம்புள்ளையை அண்மித்த போது கவீஷாவின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, 6ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை சந்தேக நபரான சமீர வீரசிங்க, கவீஷாவின் கிராமத்திற்கு அயலிலுள்ள அக்போகம பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்.

தாயாரும், அண்ணனும் கூலி வேலைகள் செய்து வந்த நிலையில், குடும்ப கஷ்டத்தால் சமீரவும் பாடசாலை கல்வியை பாதியிலேயே கைவிட்டு, கூலி வேலைக்கு சென்று வந்தான்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் சமீரவிற்கும், கவீஷாவிற்கும் காதல் ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர்களிற்குள் பிரிவு ஏற்பட்ட நிலையில் அதுவே கொலையில் முடிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் மாணவியை ம்கொலை செய்த சமீர பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: