News Just In

2/25/2022 12:44:00 PM

மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது




மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலச்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக எடுத்துவந்த நபர் நேற்று வியாழக்கிழமை (24) மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாழைச்சேனையைச் சேர்ந்தவர் ஆவார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிநடத்தலில் சம்பவதினமான நேற்று மாலை குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிசார் வலம்புரி சங்கு வாங்குவது போன்று நடித்து சங்கை கிரான்பகுதிக்கு எடுத்துவருமாறு தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த நபர் வலம்புரி சங்கை விற்பனைக்காக எடுத்துகொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டு வாழசை்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: