News Just In

2/25/2022 12:53:00 PM

மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்திற்கு மூவின மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!


Jana Ezhil

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க கோரி கையொப்பம் சேகரிக்கும் பணிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரின் ஒருங்கிணைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் இன, மாத வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன், பயங்கரவா தடைச் சட்டத்தை முழுமையாக நீக்ககோரி கையொப்பம் சேகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து இச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், இதன்படி இம்மாதம் 27 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30, மணிக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 42 வருடங்களாக அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் வாழும் மூவின மக்களும் பல துன்பியல்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பாக பல தமிழ் இளைஞர் யுவதிகள் இச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளதோடு இன்னும் பலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது சர்வதேச சமூகம், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் உள்ள பல மனித உரிமை சார் அமைப்புகள் எனபன இணைந்து மனித உரிமைககள் மீறப்படுவதாகவும் அத்தகைய சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைசட்டத்தை நீக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இக் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்ததோடு இன மத கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.



No comments: