News Just In

1/04/2022 07:49:00 PM

கிழக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிமனை திறப்பு விழா!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரி.பி.பரமேஸ்வரன் அவர்களினால் கிழக்கு மாகாண காரியாலையம் செவ்வாய்க்கிழமை 04.01.2022 திறந்து வைக்கப்பட்டது.இன்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மக்களுக்கு உயர்வான சேவையினை வழங்கும் நோக்குடன் அரசு இவ்வாறான அலுவலகங்களை மாகாணங்களில் திறந்துவருகின்றது மக்கள் தயக்கம் இன்றி தங்களின் சேவையினை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரி.பி.பரமேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய நோக்கமானது எங்களுடைய மக்களுக்கும் பொலிஸ் திணைக்களத்திக்கும் நல்லதொரு உறவை உருவாக்கி அதன் மூலம் பயணைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் 9 மாகணங்களில் வடக்கு கிழக்கு தனி மாகணமாகவும் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய 3 மாவட்டத்திக்கும் சேர்ந்த பணிமனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு மாகண பணிப்பாளரும் புலனாய்வு உத்தியோகத்தரும் கடமைகளை மேற்கொள்வார்கள் இதன் பிரதான அலுவலகம் கொழும்பில் உள்ளதாகவும். 24 மணி நேரமும் இயங்குகின்ற 1960 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் முறைப்பாடுகளை அறிவித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது முறைப்பாடுகளை கடிதங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக அல்லது தொலைநகல் 011216655 என்ற இலக்கம் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக அல்லது தொலைபேசி இலக்கம் 0112166500, 0112166533 மூலமாக அல்லது வாட்சப் இலக்கம் 0710361910 ஊடாகவும் அல்லது இணையதளம் ஊடாகவும்; தமது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

மேலும் நல்லதொரு சமுதாயத்தை பொலிஸ் திணைக்களத்தின் மூலம் உருவாக்குவதற்கும் இதன் போது பொது மக்கள் உரிமையுடன் வேலைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஆணைக்குழுவாக மாற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றது என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன் 









No comments: