News Just In

1/06/2022 04:45:00 PM

வாழைச்சேனையில் 'பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்' நூல் வெளியீடு



(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம். நவாஸ் (ஸலாமி) எழுதிய 'பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்' எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட மக்கள் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ். நவநீதன் மற்றும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஊழியர் சேமலாப நிதியத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.அமீன், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.ரீ. அஜ்மீர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபிள்யூ.எஸ். எதிரிசிங்க (OIC) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி), நூல் நயவுரையையும், காவத்தமுனை மில்லத் வித்தியாலய அதிபர் எச்.எம்.எம். இஸ்மாயில் வாழ்த்துரையையும் நிகழ்த்துவதோடு, நிகழ்ச்சியை எம்.எச்.எம். அப்சல் அலி தொகுத்து வழங்குகிறார்.


No comments: