News Just In

1/06/2022 06:12:00 AM

இலங்கை விமானப்படையின் கஃபீர் படைப்பிரிவின் 26 வது வருட கொண்டாட்டம் !



Mohamed Farzan

கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படையின் இல 10 ஆம் தாக்குதல் கஃபீர் படைப்பிரிவின் வெள்ளிவிழா கடந்த 2022 ஜனவரி 05ம் திகதியுடன் 26 வருடத்தை வெற்றிகரமாக கடந்து கொண்டாடுகிறது.
இல 10 ஆம் தாக்குதல் படைப்பிரிவானது பாலைவனத்தின் சிங்கம் என்று பெருமிதத்துடன் அழைக்கப்படும் இஸ்ரயீல் நாட்டில் தயாரிக்கப்பட்ட 06 கஃபீர் போர்விமானங்களை கொண்டு 1996 ஜனவரி மாதம் 05ம் திகதி தற்போதைய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் உட்பட 04 விமானிகள் மற்றும் 04 பொறியியலாளர்கள் உட்பட 70 உதவியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பின்பு கடந்த 2000 ம் ஆண்டு மேலும் 09 விமானங்களுடன் சக்திமிக்க படைப்பிரவாக வளர்ச்சிபெற்றது தற்போதைய விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இப்படைப்பிரிவின் விமானியாகவும் விமானிகளின் பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் கட்டளை அதிகாரியாகவும் கடமை புரிந்துள்ளார்.


நாட்டலில் இடம்பெற்ற 03 தாசாப்த யுத்தத்தினை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு படைப்பிரிவாக இந்த படைப்பிரிவு காணப்படுகின்றது இதன்முகமாக கடந்த 2009 மார்ச் 08ம் திகதி இப்படைப்பிரிவுக்கு அன்றய ஜனாதிபதியான அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இப்படைப்பிரிவுக்கு உயரிய விருதான ஜனாதிபதி வர்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1996 ம் ஆண்டு தொடக்கம் இறுதி எல். டீ. டீ. ஈ பயங்கரவதற்கு எதிராக இறுதி மனிதாபிமான நடவடிக்கை வரை இப்படைப்பிரிவானது அளப்பெரிய சேவையை ஆற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் இதுவரை சுமார் 2600 வான்தாக்குதல்கள் இந்த படைப்பிரிவின் மூலம் நடத்தப்பட்டுள்ளது.




No comments: