இலங்கையில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் நேற்று (08) மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,892 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து 6,689 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: