News Just In

11/09/2021 06:52:00 PM

கைதடியில் டொல்பின் வாகனம் விபத்து: பத்திற்கும் மேற்பட்டோரின் நிலை

யாழ்ப்பாண குடாநாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் கொழும்பு துறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் மழையினால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக நாட்டில் மேலும் சில விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: