News Just In

11/10/2021 06:31:00 AM

ஹிட்லரின் ஆட்சியின்கீழ் இடம்பெற்ற சம்பவங்களே தற்போது இலங்கையிலும் அரங்கேறுகின்றன - ஐக்கிய மக்கள் சக்தி

எமது நாட்டின் தற்போதைய நிலவரங்களை ஒத்த சம்பவங்களே ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது ஜேர்மனியிலும் நடைபெற்றன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய ஹிட்லர், குறுகிய காலத்திற்குள்ளாகவே மிகமோசமான பாஸிசவாதியாக மாறினார். அவருக்கும் எமது நாட்டின் ஆட்சியாளருக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக இப்போது அனைவரும் ஒன்றுபடாவிட்டால், எதிர்வருங்காலத்தில் வாழ்வதற்கென இந்த தேசம் எஞ்சியிருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய இளைஞர் சக்தியின் உபதலைவர் ரெஹான் ஜயவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (9 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments: