News Just In

11/07/2021 06:35:00 AM

ஒப்பந்தத்தை நீடிக்காவிடின் சமையல் எரிவாயு இல்லை : தாம் அச்சுறுத்தப்படுவதாக லிட்ரோ தலைவர்

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் நாட்டுக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனமும், அவர்களின் கட்டளைக்கு அமைய செயற்படும் அதிகாரிகளும் உள்ளார்கள். சேவை விநியோக ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருட காலத்திற்கு நீடிக்குமாறு தொடர்ந்து விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு அடிபணியாததன் காரணமாக எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸார ஜயசிங்க தெரிவித்தார்

ஒப்பந்தத்தை நீடித்தால் சுமார் 10 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவை நுகர்வோர் எதிர்கொள்ள நேரிடும். என்பதனால் ஜனாதிபதியின் ஆலோசனை கிடைக்கும் வரை அமைதியாகவுள்ளோம். எம்மிடம் எரிவாயு குறைந்தளவு கூட இல்லை. துறைமுகத்திற்கு எரிவாயு கப்பல் வந்துள்ளது.

இருப்பினும் அடுத்தக்கட்ட நடவடிக்ககைளை முன்னெடுக்க முடியவில்லை. ஒப்பந்தத்தை நீடிக்காவிடின் எரிவாயு இல்லை என அந்நிறுவனம் அச்சுறுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.லிட்ரோ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

லிட்ரோ நிறுவனத்திற்கு தற்போது எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து எரிவாயுவை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருட காலத்திற்கு நீடித்தால் லிட்ரோ நிறுவனம் சுமார் 10 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.

லிட்ரோ நிறுவனத்தின் முன்னால் தலைவர் குறித்த நிறுவனத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக சர்வதேசத்தில் குறைவான விலையில் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு எவரையும் வர விடுவதில்லை. ஒரு தரப்பினர் மாத்திரம் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கின்றனர். கட்சி, அரசாங்கம் அவசியமற்றது. மோசடியாளர்கள் என்பது ஒரு தரப்பினர் . திருடர்களுடன் அனைவரும் உள்ளார்கள். அதனால் கடமையினை சரிவர செய்யும் தரப்பினருக்கு இடையூறு விளைவிக்கிறார்கள். இதன் காரணமாகவே கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 1ஆம் திகதி வரை எரிவாயுவை விநியோகிக்க முடியவில்லை.

எம்மிடம் சிறிய அளவிலாவது எரிவாயு இருக்கவில்லை. எரிவாயு கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த போது அந்த குத்தகை ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீடிக்காவிடின் எரிவாயு வழங்க முடியாது என அவர்கள் எம்மை அச்சுறுத்தினார்கள். இதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் தலைவர் மற்றும் நிறைவேற்று சபை அமைதியாக இருந்ததன் காரணமாக ஜனாதிபதியின் ஆலோசனை கிடைக்கும் வரை அமைதியாக இருக்க நேர்ந்தது.குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருட காலத்திற்கு நீடித்தால் 10 பில்லியன் நட்டத்தை தெரிந்தே எதிர்க்கொள்ள நேரிடும்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இ;ப்பிரச்சினைகளை ஆரம்பத்தில் குறிப்பிடாததற்கு கவலயைடைந்தேன் இருப்பினும் தற்போது மோசடியை தடுத்ததற்கு மகிழ்ச்சியடைkeran


No comments: