News Just In

11/18/2021 07:06:00 AM

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பெருந்தொகை நிதி ஒதுக்கீடு!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக கிழக்கு மாகாணத்தின் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் ஊடாக பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக நேற்று (17.11.2021) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் , 2020 ஆரம்ப காலத் தொடக்கம் Covid 19 தொற்றினால் எமது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

அத்துடன் கடந்த கால ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான மத்திய வங்கி நிதிமோசடி யானது எமது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இவ்வாறான சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொருளாதார ரீதியாக பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய சந்தர்ப்பம் உருவாகியிருந்த சந்தர்ப்பத்திலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற ரீதியில் எமது நாடும்பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இதேபோன்று அரசாங்கத்திற்கு கடந்த அரசாங்கத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பிலும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க இந்த அரசாங்கத்திற்கு நேரிட்டது

இவ்வாறான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை கிராமிய மட்டத்திலான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு யோசனைகளை கிராம மட்டத்தில் இருந்து மக்களின் கருத்துக்களை பெற்று வருடத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது
இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் முன் வைக்கப்பட்டிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக இந்நாட்டின் வீதிக்கட்டடமைப்பை போன்றே விவசாயிகளுக்கு பாரிய குளங்கள் புனரமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் நாட்டு மக்களின் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அதேபோன்று சேதனப் பசளை பயன்படுத்தி நம் நாட்டை பசுமை நாடாக மாற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இரசாயனப் பசளைக்கு பதிலாக சேதனப் பசளைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும். வரைபடத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பண வரவு செலவுத் திட்ட யோசனை அது கிராமிய மட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான அதிக முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments: