News Just In

10/31/2021 06:52:00 PM

அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா வெளியிட்டு வைத்த பல்துறை கலைஞர் அலிக்கான் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருப்பு" கவிதை நூல்!

கவிஞர், பல்துறை கலைஞர் என்.எம். அலிக்கான் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருப்பு" கவிதை நூல் வெளியீட்டு விழா அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு வாபா றோயளி மண்டபத்தில் அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் நிகழ்ச்சி திட்டப்பணிப்பாளரும், ஊடகவியலாளருமான எம்.எஸ். எம். ஸாக்கிரின் நெறிப்படுத்தலில் அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளருமான, சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமரின் தலைமையில் இடம்பெற்றது.

அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் 15 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள், கொரோனாப்பணியில் களப்பணியாற்றிய போது உயிர்நீத்த வைத்தியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் எல்லோரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளருமான, கவிஞர், ஆசிரியர் ஜெஸ்மி மூஸா நிகழ்த்தினார். முதல் பிரதியை அஹமட் அலி வைத்தியசாலையின் முதல்வர் எம்.எம். இஸ்ஸதீனும், இரண்டாம் பிரதியை முனைமருதவன் எம்.எச்.எம். இப்ராஹீமும் பெற்றுக்கொண்டனர்.

சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் ஜுனூஸ், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா,பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டர் நேஷனலின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் பிரபல உயிரியல் பாட ஆசிரியர் றிசாத் செரீப் ஆகியோர் முன்னிலை அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளி ன் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனீபா, ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல். எம்.நக்பர், ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், அம்பாறை மாவட்ட கலாச்சார அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தெளபீக், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ .எம். றிம்ஸான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அரச உயரதிகாரிகள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ரப் , வைத்தியர்கள், கலை, இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் டைட்டானிக் இசைக்குழுவின் பிரதானி இசையமைப்பாளரும் பாடகருமான எம்.எச். றியாஸ்கான் இசையமைத்து பாடிய "எங்கள் தாயகமே" எனும் பாடல் இறுவெட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கலை, இலக்கிய, ஊடக செயற்பாட்டாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

மாளிகைக்காடு, கல்முனை நிருபர்கள்  









No comments: