News Just In

8/07/2021 04:48:00 PM

சேதனப் பசளை உற்பத்திக்காக ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளுக்கும் ஒரு மில்லியன் நிதி...!!


நஞ்சற்ற நாடு, நஞ்சற்ற உணவு உற்பத்தி என்ற அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் அனுராதா ஜகம்பத் தலைமையில் “செழுமையான கிழக்கு, நிலைபேறான விவசாயம்” என்னும் செயற்திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளினூடாக இக் கொள்கைனத் திட்டத்திற்குத் தேவையான சேதனப் பசளைகளை உற்பத்தி செய்தல் தொடர்பில் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வானது இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சேதனப் பசளை உற்பத்தியில் உள்ளுராட்சி சபைகளின் பங்களிப்பு தொடர்பிலும், அரசின் மேற்படி கொள்கைத் திட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவுரைகளும் இடம்பெற்றன.

இது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவிக்கையில், இவ்விழிப்புணர்வுச் செயற்பாடு ஏற்கனவே திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுங்கமைத்துள்ளோம். தேசிய கொள்கையின் அடிப்படையில் இராசயணப் பாவணை நிறுத்தப்பட்டு இயற்கைப் பசளைப் பாவணை அத்தியாவசியமாக்கப்டடுள்ளது. இந்த இடிப்படையில் எங்களது உள்ளுராட்சி சபைகள் சார்பில் எங்களால் வழங்கக் கூடிய ஒத்துழைப்பிற்காக ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளும் சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருக்கின்றன.

அந்த அடிப்படையில் கழிவுகள் தரம்பிரிக்கும் செயற்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில உள்ளுராட்சி சபைகள் கழிவுகளைத் தரம்பிரித்துச் சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் கௌரவ ஆளுநர் அவர்களினதும், பிரதம செயலாளரின் அனுமதிக்கமைவாகவும் ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளுக்கும் சேதனப் பசளை உற்பத்திக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சபைகள் உடனடியாக ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










No comments: