News Just In

7/06/2021 05:16:00 PM

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் இணையவழி கற்றலை இலகுபடுத்தும் நோக்கில் DATA PACKAGE வழங்கும் நிகழ்வு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு வலயங்களில் உள்ள மாணவர்களின் இணையவழி கற்றலை இலகுபடுத்தும் நோக்கில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் DATA Package தேவையான 4000 மாணவர்களுக்கு Data Package வழங்கும் நிகழ்வு இன்று(06) மட்டக்களப்பு வின்சென் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு.M.பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் திரு.க.லோகேந்திரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியன், மட்டக்களப்பு கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன் ரவி, பங்குதாரர்களான Dialog, Airtel, Mobitel ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள், வின்சன் தேசிய பாடசாலை அதிபர் தவதிருமகள் உதயகுமார் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணையவழி கல்வியை பெறுவதில் சிரமப்படும் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம் மற்றும் கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் உள்ள 4000 அதிகஸ்ர பிரதேச மாணவர்களை இனங்கண்டு குறித்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கான இலவச Data Package வழங்கப்பட்டதுடன் குறித்த திட்டத்தினை Dialog, Airtel மற்றும் Mobitel இணைய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





















No comments: