News Just In

7/27/2021 04:22:00 PM

மட்டக்களப்பில் சேதனப் பசளை உற்பத்தி முயற்சியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காணொளி- https://youtu.be/hn6MrNSLJ1s
சேதனப் பசளை உற்பத்தி முயற்சியாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நோக்குடன் சேதனப் பசளைகளைக் கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சேதனப் பசளைகளை உற்பத்தி செய்யும் முயற்சியாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட செயலமர்வு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது சேதனப் பசளைகளை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முயற்சியாளர்களுக்குத் தேவையான விவசாய மற்றும் கமநலம் சார்ந்த தெழிவூட்டல்களும், அரச வங்கிகளினால் வழங்கப்படும் கடன்வசதிகள் தொடர்பான விபரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட உரச் செயலக உதவி பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத் ஆகியோர் கலந்து கொண்டு உற்பத்தியாளர்களைப் பதிவு செய்தல் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புனர்வு கருத்துக்களை வழங்கினர்.

மேலும் இம்முயறசியாளர்களுக்குத் தேவையான கடன்வசதிகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முகாமையாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது செங்கலடி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுனதீவு, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களபபு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த திட்டமிடல் பணிப்பாளர்கள், சேதனப் பசளை உற்பத்தி முயற்சியாளர்கள், விவசாயிகள், மாவட்ட செயலக, பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.











No comments: