News Just In

6/19/2021 08:00:00 AM

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய்- வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை...!!


இலங்கையில் பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) எனப்படும் புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த புழு உருவாகின்றது.

இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும். இதன் பின்னர் அந்த புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ,இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்து கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments: