News Just In

6/19/2021 07:45:00 AM

நாட்டில் கொரோனா தொற்றால் 2480பேர் உயிரிழப்பு- மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235413ஆக அதிகரிப்பு...!!


நாட்டில் நேற்று முன்தினம் (2021.06.17) இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு,

30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை.
30 – 59 வயது இடைப்பட்ட பெண்கள் 05 பேர், ஆண்கள் 08 பேர். மொத்தம் 13 பேர்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கை 18 பேர், ஆண்கள்கை 24 பேர். மொத்தம் 42 பேர்.

இதன் அடிப்படடையில் 23 பெண்களும் 32 ஆண்களும் அடங்கலாக மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,480ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், நாட்டில் நேற்று மட்டும் 2347 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு 235413ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1825 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக 197259 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2480ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 35729 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 2391683 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை 748573பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

No comments: