News Just In

6/13/2021 06:51:00 PM

கொரோனா தொடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விசேட பரிசு தொகை அறிவிப்பு...!!


கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கனடாவில் தடுப்பூசி போடும் திட்டம் நடைபெற்று வருகின்றது.

மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு விழிப்புணர்வு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக லொட்டரி திட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் Jason Kenney இது தொடர்பில் வீடியோ ஒன்றையும் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆல்பர்ட்டா மக்கள் பெரும்பாலானவர்கள் மிக விரைவில் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த லொட்டரி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் பொருட்டு, மாகாண மக்களில் 70% பேர்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்நிலையிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தமது முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், அவர்கள் 1 மில்லியன் டொலர் பரிசு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என முதல்வர் Jason Kenney அறிவித்துள்ளார்.

மேலும், ஆல்பர்ட்டாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளி மாகாண மக்களுக்கும் இந்த 1 மில்லியன் டொலர் பரிசு திட்டத்தில் பங்கேற்கலாம்.

அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

சனிக்கிழமை வரையில் ஆல்ப்ர்ட்டா மக்களில் 68.5% பேர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி 12 வயதுக்கு மேற்பட்ட 19.2% பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: