News Just In

6/20/2021 02:53:00 PM

மட்டக்களப்பு- ஐயங்கேணியில் 2 கோடி செலவில் வீதி அபிவிருத்தி பணிகளை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்..!!


(மட்டக்களப்புமொகமட்தஸ்.ரீப்)
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் மற்றும் பயணத்தடைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகளை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய ஒரு இலட்சம் கிலோ மீட்டர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் வீதி அமைக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாரதிபுரம் ஐயன்கேணி குறுக்கு வீதி சுமார் இரண்டு கோடியே முப்பது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கும் பணிகளை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது இந்த வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எந்திரி எஸ். எம். அன்வர் சதாத் தொழில்நுட்ப அதிகாரி என்.மதியழகன் ஏறாவூர்பற்று பிரதேசசபை உறுப்பினர். எஸ். ஜெய்கனேஷ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.








No comments: