ஏறாவூரின் முன்னோடிகளில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளுரமான வை.எம். அப்துல் காதர் மூப்படைந்ததன் காரணமாக தனது 87வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.
இவர் ஏறாவூரின் முன்னோடியும் மூத்த சமூக செயற்பாட்டாளரும் ஒரு கல்விமானுமாகப் போற்றப்படுகிறார் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
றிசேர்வ் பொலிஸ் உத்தியோகத்தமராகவும் பின்னர் ஆசிரியராகவும் கடைமையாற்றிய இவர் பின்னாட்களில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக சமாதான செயற்பாடுகளிலும் தன்னை முழுiமாயக ஈடுபடுத்திக் கொண்டு அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
அதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரங்கிளின்போது பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் ஊர் முக்கியஸ்தராக இவர் பங்கெடுத்துக் கொண்டார்.
எல்ரீரீஈ இயக்கத்தினரின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் முதலாவதும் இறுதியுமான வாகரை மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட காதருக்கு புலிகளின் சர்வதேச விவகார அரசியல் ஆலோகரின் மனைவி அடேல் பாலசிங்கம் தனது கையால் உணவு பரிமாறினார் என்ற விடயத்தை காதர் பல சமாதானக் கூட்டங்களில் நினைவுபடுத்திப் பேசியிருக்கிறார்.
மர்ஹ{ம் காதர் அவர்கள் யுத்த காலத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அத்தனை சமாதானக் கூட்டங்களிலும் பிரஜைகள் குழுக் கூட்டங்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவராகப் பங்கெடுத்திருக்கின்றார்.
கூட்டுறவுத்துறை, கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவுத்துறை, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மத்தியஸ்த சபை ஆகியவற்றின் தலைவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் பணியாற்றியுள்ளார காதர்.
மத்தியஸ்த சபையின் தலைவராக இவர் பணியாற்றிய 13 ஆண்டு காலப் பகுதியில் 3200 வழக்குகளை மத்தியஸ்தம் செய்து நீதிமன்றம் செல்ல விடாது இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தார் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டப்படுகிறது.
தனது சொந்தக் காணியை பாடசாலை ஒன்றுக்காகவும் பள்ளிவாசல் ஒன்றுக்காகவும் வழங்கி வைத்தார் என்றும் ஐயன்கேணி காதர் வித்தியாலயம் அவரது காணியில் அவரது பெயரிலேயே உருவாக்கப்பட்டதாகும் என்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட “இனசமதி” சிறப்பு மலரில் குறிப்பிடப்பட்டள்ளது.
No comments: