2020 கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை கிழக்கு மாகாணத்தில் இன்று கொவிட் 19 கொரோனா தடுப்பு சுகாதாரவழிமுறைகளை பின்பற்றி எவ்வித இடையூறுமின்றி தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன்படி மட்டக்கப்பு மாவட்டத்தில் கொவிட்19 கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளைகலுக்கமைய மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய ஐந்து வலயங்களில் எவ்விததடைகளுமின்றி இப்பரீட்சை நடைபெறுவதாகவும் பரீட்சார்த்திகள் நேரகாலத்துடன் சமூகமளித்திருந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இம்மாவட்டத்தில் மொத்தமாக 22,928பேர் இப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் பாடசாலை பரீட்சார்த்திகள் 10257 பேரும், பிரத்தியேக பரீட்சார்த்திகள் 12,671 பேரும் தோற்றுகின்றனர். இதில் ஆண் பரீட்சார்த்திகளும், பெண் பரீட்சார்த்திகளும்அடங்குவர். இம்மாவட்டத்தில் 159 பிரதான பரீட்சை மண்டபங்களும் 15 இணைப்பு அலுவலகங்களும் இப்பரீட்சைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
No comments: