வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தடை விதித்து களுவாஞ்சி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றம் ஊடக பரவலாக போராட்டத்தினை முன்னெடுக்கும் அரசியலாவாதிகள், அமைப்புக்கள், அமைப்புக்களின் தலைவர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் அவர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவானது ஜனநாஜக சிவில் செயற்பாடுகளுக்கு எதிரானதும் ஊடகத்துறைமீது மீண்டும் இந்த அரசாங்கம் தனது அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. எனவே ஊடகவியலாளர் மீது இவ்வாறானதொரு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதானது ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலான செய்தியை பொலிசார் கூறியுள்ளனர் எனவே மேற்படி ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட அச்சுறுத்தல் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது பொலிசார் கைவைக்கின்ற செயற்பாடுகளை தடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: