தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உரிய முறைமையொன்று காணப்படாத நிலையிலேயே, தாம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கம்பஹா மாவட்ட தலைவர் சமிந்த சமரதிவாகார தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 225 கிராம சேவகர் பிரிவுகளில், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசியினை வழங்கும் நடவடிக்கை, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நடவடிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது 30 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசியினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே, கம்பஹா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இருந்து இன்று முதல் தாம் விலகி செயற்படவுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.
No comments: