இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையின்றிய வானிலை நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலமையை எதிர்பார்க்கலாமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments: