News Just In

1/02/2021 08:12:00 AM

HAND SANITIZER தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!!


தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லலை வர்த்தகத்தில் ஈடுபடுதலை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கை சுத்திகரிப்பு தயாரிப்புக்களின் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் ஆகியோர் தயாரிப்புக்களை இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ, அம்பலப்படுத்தவோ அல்லது விற்பனைக்கு வழங்கவோ, மொத்தமாக அல்லது சில்லறை விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பதிவு எண் தெளிவான முறையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கை சுத்திகரிப்பு தயாரிப்புகளில் பொறிக்கப்படவேண்டும் என்று நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்கவின் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: