News Just In

1/03/2021 05:32:00 PM

மட்டக்களப்பு- புதூர் பிரதேசத்தில் ஒரு கோடி செலவில் புதிய வீதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் திறந்து வைத்தார்!!

(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அமைக்கும் அபிவிருத்தி திட்டம் கிழக்கு மாகாணத்தில் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 54 கோடி ரூபாய் செலவில் 25 கிலோ மீட்டர் கிராமிய வீதிகள் அமைக்கும் வீதி அபிவிருத்திப் திட்டப்பணிகள் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்குமாகாண பணிப்பாளர். திருமதி. கலைவாணி வன்னியசிங்கம் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்துக்கமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலடங்கும் புதூர் பிரதேசத்தில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய கிராமியவீதி இன்று(03) வைபவரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த வீதியை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தார். இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி வன்னியசிங்கம் மட்டக்களப்பு மாநகர உறுப்பினர் எஸ்.அசோக் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.












No comments: