News Just In

1/03/2021 11:55:00 AM

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் கற்கும் வறிய மாணவர்களுக்கு 2021 ஆம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் முழுமையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவியின்மூலம் மட்/ககு/ தரவை ஶ்ரீ கலைவாணி வித்தியாலயம் மற்றும் மட்/ககு/ சிறுதேன்கல் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளை சேர்ந்த 41 வறிய மாணவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் சுதாகரன் சியாந் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

ஜெர்மனியின் ஸ்ருட்காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டுவரும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

S.SIVAKUMARAN,
MA - ATI, JAFFNA.
JUSTICE OF THE PEACE (Whole Island).
Address : No 17, Selvi Theater Road, Eravur 04, Batticaloa.
Phone : 0776099226






No comments: