News Just In

1/03/2021 12:27:00 PM

திருகோணமலையில் கடந்த 12 மணி நேரத்தில் 13 கொரோனா நோயாளர்கள்- மொத்த எண்ணிக்கை 160ஆக அதிகரிப்பு!!


திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் 13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சேருவில பகதியில் 3 கொரோனா நோயாளர்களும் தம்பலகாமம் பகதியில் 6 பேரும் திருகோணமலையில் 84 பேரும் உப்புவெளியில் 4 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: