பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஓட்டமாவடி வர்த்தகர்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஓட்டமாவடி வர்த்தக சங்கம் தமது நன்றிகளை தெரிவிக்கிறது என்று அதன் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வர்த்தக சங்கம் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஆகியவை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த திங்கட்கிழமை (4) மாலை முதல் வியாழக்கிழமை (7) வரை கடைகளை மூடத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு வர்த்தக நிலையங்களை மூடி கொரோனா பரவலை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ள வர்த்தக சமூகத்திற்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் மேலும் தெரிவித்தார்.





No comments: